FIRST TIME GOING OUT... 26TH March 2015
கடும் உழைப்பு என்பது சந்தோஷம். அதை செய்து கொண்டே இருக்க வேண்டும். எதோ ஒரு கணத்தில் அது கிரீடத்தை கொண்டு வந்து உங்கள் தலையில் வைக்கும். எந்த கணம் யாருக்கு கிரீடம் என்று தெரியாது. உழைபவருக்கு நிச்சயம் கிரீடம் உண்டு. உழைத்து விட்டு பலன் உடனடியாக எதிர்பார்க்கிற போது உடனடியாக பிரதி பலன் வேண்டும் என்கிற போது உழைப்போடு நல்ல உறவு கொள்ள முடியவில்லை .
ஒரு போதும் உழைப்பவர் தோற்று போக மாட்டார், உண்மை ஒரு அனுபவம், மனோ நிலை. உண்மையான உழைப்பு குறுக்கு வழி தேடாது. வீரம் காட்டாது. சுலபமா ? கஷ்டமா ? என்று எல்லாம் கணக்கு போடாது. - வெற்றி வேண்டுமெனில்
நல்ல தோழமை தான் எல்லாவற்றுக்கும் முக்கியமான விஷயம். தோழமை தவறாக இருந்தால் வாழ்க்கை உழப்பலாகப் போகும். கூடா ஒழுக்கம் கேடாய் முடியும். எப்பாடுபட்டாவது நல்லவர்களின் நட்புக்கு முயற்சி செய். அவர்களோடேயே இரு. - தங்கக்கை
தன்மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு பிறர் மீதும் நம்பிக்கை இல்லை. நீ காதலிக்கப்பட வேண்டுமெனில் காதலிக்க வேண்டும். காதல் என்ன என்பது அறிய வேண்டும். காதல் என்பது மதித்தல், விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம், எந்த எதிர்பார்ப்புமின்றி தான் விரும்பிய வண்ணமே தன் சந்தொஷத்திர்கென்றே பிறர் வளைவர்கள் என்று எதிர்பார்ப்பதில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏமாற்றம் சினம் தரும், சினம் வஞ்சனை உருவாக்கும், வஞ்சனை பொய் சொல்லும், வன்முறை காட்டும், வன்முறை வன்முறையால் சந்திக்கப்படும். பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்.
Going to write something regularly from tomorrow onwards.. lets hope for it.