Stay fit is the first thing required for all of us. Either go through walking or any other exercise for just 15 mins.
Back to Blogging after a long days. Hopefully I share my thoughts and experience of my daily life here.... 

Wake Up Early

Franklin was up before dawn every day, because he knew that the quiet solitude of early morning is the best time to compose yourself, get clear about your goals and the direction of your life. He would take 3 hours to read, study, plan and prepare for the day ahead – all before breakfast!

We all know what it’s like to oversleep. The alarm doesn’t go off for some reason, and you open your eyes to find that you have to be at work in only ten minutes. You leap out of bed, throw your clothes on, and rush out the door, feeling hurried and frazzled and completely out-of-sorts.

For some of us, this is an everyday occurrence!

Now imagine what life would be like if you had 3 full hours to get ready for your day. You can wash, dress, make breakfast, read the news, all at a leisurely pace. No rushing, no stress, just relaxing, enjoying your morning, and taking your time to fully wake up.

Ahhh… doesn’t that feel great?


Read more: http://www.keepinspiring.me/8-life-lessons-from-benjamin-franklin/#ixzz3voTRWbZx

Motivational Story 1

Q: What is water at 99 degrees? 
A: It is just water. Probably quite hot but just plain water. 

Q: What happens at 100 degrees? 
A: It becomes steam. 

Q: What can steam do? 
A: Steam can move locomotives. 

So keep trying, pushing harder. You never know when you are at 99 and how much more is needed to become that 100. And then you can do the unimaginable. 

Sometimes you need to slow down to eventually go faster.
One of the best days in my life... spent lovely days with my honey in Munnar Backnell Forest Resort... I loved it.

அவமானம் ஒரு மூலதனம்

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.

நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.

நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)
காதலில் தோல்வி அடைந்த ஒரு ஆணேயோ பெண்ணையோ காதலித்து பார். உண்மையான காதலை உணர்த்துவார்கள், ஆனால் அவ்வளவு எளிதாக அவர்களின் காதலை பெற்று விட முடியாது,
முடிந்தால் பெற்று கொள்.

Source: my friend.

Tips for Successful Marriage

‘‘வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நிறைவேறுவதற்கான தருணம் திருமணத்தில்தான் தொடங்குகிறது.


முதல் இரண்டு மாதம் உற்சாகம், மகிழ்ச்சி, இன்பம், காதல், பாசம், புதுமை, மோகம் என அத்தனையும் நிகழ்ந்து வானமே வசப்படுவது போல் தோன்றும். சிலருக்கு, இவை நினைத்தபடியே நடக்கலாம். சிலருக்கு எதிர்மறையாகவும் அமையலாம்.


இந்தியாவில், திருமணம் என்பது ஆண், பெண் மட்டும் இணைவதல்ல. இரண்டு குடும்பங்களும் சேர்ந்தே இணைவதுதான் திருமணம். இருபாலினருக்கும் அவரது பெற்றோரும் அவர்களது சார்பில் அறிவுரைகளைக் கூறி தயார் செய்வது நல்லதோர் உறவின் தொடக்கமாகும்.


"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும். ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ‘ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்’ எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வரமுடியும்” என்கிற மனநல ஆலோசகரான வாசுகி சிதம்பரம் சொல்லும், மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே...


1. காதலை விட மரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும்.


2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும்.


3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை அளிக்க வேண்டும்.


4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில் கூட அந்யோன்யம் அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல.


5. உன் சம்பளம் ‘உனக்கு, எனக்கு’ எனப் பிரித்துக் கொள்ளாமல் ‘நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறாயா?’ என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம்.


6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல்.


7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள்.


8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும்.


9. உயர் படிப்புப் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் ‘குடும்பக் கல்வி’ என்பது இருவருக்குமே பொதுவானது.


10. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ் குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்னை பெரிதாகாமலும் தடுக்க முடியும்.


11. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும் தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.


12. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.


13. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான மதிப்பை தரும். கவனம்!


14. தீய / நெகடிவ்வான குணங்களை ஒரு தாளில் எழுதி அதை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.


15. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள் போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது இருதரப்பினருக்கும் இடையே பிரச்னைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது.


16. திருமணத்துக்கு முன் பழகும் போதே இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணத்துக்கு அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல் இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.


17. வாழ்க்கை முறை, மன பக்குவம், பிரச்னைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம்.


18. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும்.


19. ஆரோக்கியமான இடைவெளியை அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்னைகளில் வளைந்து கொடுங்கள்.


20. எந்தத் தருணத்திலும் துணையின்றிச் செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம்.


Read more: http://www.penmai.com/forums/marriage/80988-tips-successful-marriage-life-vs-20-a.html#ixzz3eh7lwWYM