என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல் விழுந்த...)
மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்
(என் மேல் விழுந்த ...)
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆகிவிடுமோ
(என் மேல் விழுந்த...)
No comments:
Post a Comment