best tamil quotes in tamil

1. நோய்க்கு முதல் மருந்து... தாய்!
2. முட்டாள்களில் பல ரகம். அதில் உயர் ரகம், அறிவாளி!
3. விருப்பம் இருந்தால், ஆயிரம் வழிகள். விருப்பம் இல்லாவிட்டால், ஆயிரம் காரணங்கள்!
4. எல்லாமே குற்றம் என்பவர்களுக்கு, ஏனோ குற்றம் சொல்வது மட்டும் குற்றமாகவே தெரிவதில்லை!
5. தொடர்ச்சியா சில உதவிகளைச் சிலருக்குச் செய்தால், அதை நம்ம கடமையாவே ஆக்கிருவாங்க ஒருநாள்!


6. சிலர் தேவைகளுக்காக மட்டுமே நம்மிடம் சிரித்துப் பழகுகிறார்கள் எனத் தெரிந்தும், பழகிக்கொண்டு இருக்கிறோம் நம் தேவைகளுக்காக!
7. உலக நடிப்பில் ஒரு வகை, விருந்தாளிகள் வீட்டில் இருக்கும்போது கணவனும் மனைவியும் காட்டும் அந்நியோன்யம்!
8. உங்க இஷ்டம் போலச் செய்ங்க! எனும் மனைவியின் அனுமதி, உண்மையில் அனுமதியே இல்லை!
9. வாதாட பலருக்குத் தெரியும். உரையாட ஒரு சிலருக்கே தெரியும்!
10. நம்பர் 1 என்பது ஜீரோவுக்கு மிக அருகில் இருப்பது!


11. முடியாது என்பதன் டெக்கரேட்டட் வெர்ஷன்தான் யோசித்துச் சொல்கிறேன்!
12. நோண்டி நோண்டிக் கேட்கப்படும் கேள்விகள்தான், தோண்டித் தோண்டி பொய் சொல்லவைக்கின்றன!
13. ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும். தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவது இல்லை.
14. பெண்கள் வெளியே கிளம்ப ஐந்து நிமிடம் என்றாலும், ஆண்கள் வீடு திரும்ப ஐந்து நிமிடம் என்றாலும் நம்பிடவே கூடாது!
15. அறிவும் மனமும் பேசி முடிவெடுத்து சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுப்பதற்குள், நம்மைக் கடந்துபோய்விடுகிறார்கள் பிச்சைக்காரர்கள்!


16. எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்!
17. மார்கெட்ல என்ன காய்கறில்லாம் சீப்பா கிடைக்கும்னு ஹாஸ்டல் சாப்பாட்டை வெச்சே கண்டுபிடிச்சுரலாம்!
18. மனைவி... சமையல் பழகும் முன், மனைவியின் சமையல் பழகிவிடுகிறது!
19. பெண்கள் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறார்கள் கணவன் அமையும் வரை. ஆண்கள் எதிர்காலம்பற்றிக் கவலைப்படுவதே இல்லை மனைவி அமையும் வரை!
20. தாயிடம் உங்கள் பேச்சுத் திறமையைக் காட்டாதீர்கள். உங்களுக்குப் பேச்சு கற்றுக்கொடுத்ததே அவர்தான்!


21. அப்பாவும் மகளும் பேசுவது புரிதல்கள்; அம்மாவும் மகளும் பேசுவது ரகசியங்கள்!
22. ஹ்யூமர் சென்ஸ் உள்ள ஆணையும், ரூமர் சென்ஸ் உள்ள பெண்ணையும் பெண்களுக்கு எளிதில் பிடித்து விடுகிறது!
23. பெண்களின் SIGNATURE என்பது, பெயரை எழுதுவது; ஆண்களின் SIGNATURE என்பது, பெயரைக் கிறுக்குவது!
24. நோயுற்றோருக்கான முதலுதவி, மருத்துவர்களின் புன்னகை!
25. தூங்குவதுபோல் நடிப்பவர்கள் புரண்டு படுப்பது இல்லை!


26. கீ செயின் என்பது நாம் எல்லா சாவிகளையும் ஒரே சமயத்தில் தொலைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது!
27. ஃபிரிஜ் என்பது சற்றே காஸ்ட்லியான குப்பைத் தொட்டி!
28. உங்களை ஒருவர் விமர்சித்தால் உங்குக்குக் கோபம் வருதா? அப்படின்னா அந்த விமர்சனம் கரெக்டு!
29. உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் எனப் புரிகிறது!
30. வண்டியை மழையில நிறுத்தியிருந்தா சுத்தமாகும், ஓட்டிட்டுப் போனா அழுக்காகும் இவ்ளோதாங்க வாழ்க்கை!


31. இங்கு பதில் சொல்வது எதிர்த்துப் பேசுவதாகவே கருதப்படுகிறது!
32. நம்பினால் நம்புங்கள்... தீர்க்கமான பல முடிவுகள் ஜன்னலோரப் பயணங்களில் எடுத்தவையாகவே இருக்கும்!
33. பிறரைக் காயப்படுத்தும் என்று நான் வெளிப்படுத்தாத பல வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திக்கொட்டே இருக்கின்றன!
34. எந்த மகனும் தன் அம்மாவின் சமையலை, அம்மாவைத் தவிர யாரிடத்திலும் குறை சொல்வதில்லை!
35. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்கத் தொடங்கும் முன், விலகி நிற்கக் கற்றுக் கொள்வது சிறந்தது.


36. உண்மை சொன்னால் ஓராயிரம் கேள்வி கேட்பதும், பொய் சொன்னால் நம்புவதும் மனைவி மட்டும்தான்!
37. வாய் தவறிய வார்த்தைகள் மட்டும் எப்படியோ சரியாகப் போய்ச் சேர்ந்துவிடுகின்றன!
38. பிரச்னைகளைச் சிலர் தைரியமாகவும் சிலர் புன்னகையுடனும் சிலர் கண்டுகொள்ளாததுபோலவும் எப்படியோ கையாண்டு விடுகின்றனர்.
39. ஏற்றிவிடுபவர்களைவிட, ஏத்திவிடுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்!
40. தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.


41. சொந்தக் கால்ல நிக்கிறப்போதான் தோணுது, முன்னாடி நம்மைத் தாங்கியவர்களுக்கு எம்புட்டு வலிச்சிருக்கும்னு!
42. நாம் சொன்ன ஒரு பொய் உலகுக்குத் தெரியவரும்போது, நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்துக்கு இடமாகின்றன!
43. நேரத்தைச் சேமிக்க வந்ததாக நினைக்கும் கைபேசியும் இணையமும்தான் அதிக நேரத்தைத் தின்கின்றன!
44. நீ யாரையாவது ஏமாற்றிவிட்டால் அவர்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தம் இல்லை, உன்னை அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்!
45. உணவகங்களில் பணி செய்யும் வடகிழக்கு இந்தியர்கள் முகம் சுழித்தோ, கோபமுற்றோ கண்டதில்லை. அது இயல்பா, வறுமையின் வெளிப்பாடா தெரியவில்லை!


46. கணவன் அடிச்சா நாளிதழ்ல செய்தியா போடறாங்க. மனைவி அடிச்சா வார இதழ்ல ஜோக்கா போடறாங்க!
47. ஏன் போன் எடுக்க இவ்ளோ நேரம்? என்பதில் வெட்டியாத்தானே இருக்க? என்பதுவும் அடக்கம்!
48. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நாலு வகையான சட்னி கிடைக்குது. நேத்து வெச்சது, முந்தாநாள் வெச்சது, காலைல வெச்சது!
49. பக்கத்தில் ஆண்கள் இல்லாதபோது, பெண்கள் கரப்பான்பூச்சிகளுக்குப் பயப்படுவது இல்லை!
50. ஆண்கள் ஒரு கட்டத்தில் மேக்கப்பைக் கைவிட்டுவிடுகிறார்கள்; பெண்களை ஒரு கட்டத்தில் மேக்கப் கைவிட்டுவிடுகிறது!


51. செய்யும் செயல் யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தால், நீங்கள் நிச்சயமாகத் தவறு செய்கிறீர்கள் என்று கொள்க!
52. கீழே விழுந்ததும் இயல்பாக எழுந்து நடக்கும் குழந்தையைக் கவனித்தாலே, வெற்றிக்கான ஃபார்முலா கிடைக்கும்!
53. அழகா இருந்தா கான்ஃபிடென்ஸ் வருமானு தெரியாது; ஆனா, கான்ஃபிடென்ட்டா இருந்தா, அழகும் வந்துரும்!
54. ஒரு பெண் தன் அப்பாவை அறிவாளியாகவும், தன் பிள்ளையின் அப்பாவை முட்டாளாகவும் கற்பனை செய்கிறாள்!
55. அபராதம் என்பது தவறாக நடந்து கொண்டதற்குச் செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்து கொண்டதற்குச் செலுத்தப்படும் அபராதம்!


56. கொஞ்சம் படித்தால், சொந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறோம். நிறையப் படித்தால், சொந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறோம்!
57. இறப்பதுபோல கனவு கண்டவர் உண்டு. எவரேனும் பிறப்பதுபோல கனவு கண்டது உண்டா?
58. பிடித்ததுபோக வரும் சம்பளம், யாருக்கும் பிடிப்பது இல்லை!
59. பிறர் குறையை பார்க்கிறவன் தன் குறையை உணரமாட்டான்.
60. வாய்ச்சொல்லை விட செயலின் குரலே உரக்க ஒலிக்கும்.


61. கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. வந்த பின்பு கைவிடுவது கடினம்.
62. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கோலும் மிஞ்சாது.
63. மூவர் உண்மையைப் பேசுகிறார்கள். குடிகாரர்கள், முட்டாள்கள், குழந்தைகள்.
64. காலம் தவறிய உண்மை பொய்யைப் போல தீயது.
65. உண்மையைத் தரையில் போட்டு அழுத்தினாலும் அது எழுந்து விடும்.


66. கலப்பையும், மண்வெட்டியும் தான் உலகத்திற்கு உணவூட்டுகிறது.
67. ரகசியம் என்ன ஊட்டுகிறோமோ, அதைப் பொறுத்தே மனம் வளர்கிறது.
68. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சிலுவையைச் சுமக்க வேண்டும்.
69. அதிகாலையில் எழுகின்ற பறவை தான் நெடுந்துரம் செல்லும்.
70. உன்னுடைய மனப்பாங்கு தான் உன் உயர்வை தீர்மானிக்கிறது.


71. மூடநம்பிக்கை கடவுளின் மேலுள்ள அர்த்தமற்ற பயம்.
72. அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சி கடல்.
73. வாக்குறுதிகளைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன்.
74. பணக்காரன் பின்னால் பத்து பேர். பைத்தியம் பின்னாலும் பத்து பேர்.
75. வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்.


76. இயற்கை, காலம், பொறுமை இம்மூன்றும் தான் பெரிய மருத்துவர்கள்.
77. முதுமை உணர்வைப் பொறுத்தது, வயதைப் பொறுத்தது அல்ல.
78. பிச்சனையே இல்லாத மனிதன் விளையாட்டிலிருந்து விலகி விடுகிறான்.
79. ஒருவன் வேண்டாததை வாங்கினால் வேண்டியதை விற்கக்கூடும்.
80. மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் கண்களை விடக் காதுகளை நம்பு.


81. விளம்பரத்தை அதிகம் நம்பாதே அவை பெரும்பாலும் கதைகள்.
82. சிற்றாறு ஆழமாக இருக்கும்போது நீர் நிதானமாக ஓடுகிறது.
83. ஒரு பலவீனமான உடல் மனத்தையும் பலவீனப்படுத்துகிறது.
84. முயற்ச்சிக்க முடியாதவன் தண்டிக்கப்படவேண்டியவன்.
85. துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்.


86. கீழே விழுந்தவன் விழுவதற்குப் பயப்படத் தேவையில்லை.
87. பெரிய துரதிர்ஷ்டம் நேர்மைக்கு சவால்.
88. விழித்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கு தூக்கம் தான் நல்ல சிகிச்சை.
89. களைத்த மனிதனின் தூக்கம் இனிமையானது.
90. திறந்திருக்கும் கதவு ஒரு துறவியைக் கூட தீமை செய்யத்தூண்டும்.


91. துருப்பிடித்து ஒழிவதைவிட உழைத்து ஒழிவது மேல்.
92. ஒரே தொழிலில் இருக்கும் இருவர் ஒருபோதும் இணங்குவதில்லை.
93. தொலைதோக்கில்லையேல் மனிதர்கள் மடிவார்கள்.
94. தொடங்கப்பட்ட வேலை பாதி முடிந்த மாதிரி.
95. பூவுக்கு வாசனை எவ்வாறோ அவ்வாறே மனிதனுக்குத் தோற்றம்.


96. மற்றவர்கள் சார்பில் நகைச்சுவை செய்யாதே.
97. திடீர் நட்பு, தீராத் துன்பத்தில் முடியும்.
98. வேடிக்கைக்காகக் கூட நண்பன் மனதைப் புண்படுத்தக்கூடாது.
99. உன்னுடைய பிரச்சனைகளுக்கு நீயே தீர்வு.
100. ஒவ்வொரு முடிவும் மற்றொன்றுக்கான துவக்கம்.


101. மனைவியை அடிப்பவன் வலது கையால் இடது கையை அடிக்கிறான்.
102. அற்பனுக்கு கோபம் அனாவசியமாக வரும்.
103. அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிக்கிடக்கும்.
104. வெல்வதற்கு செல்வம் தேவையில்லை. உள்ளம் தேவை.
105. வாழ்க்கையின் நோக்கமே நோக்கத்துடன் வாழ்வது.


106. தனிமனிதன் உயர்ந்தால் தேசம் உயரும்.
107. சிகரத்திலிருந்து பார்த்தால் எல்லாம் சிறியது.
108. துன்பமும், மகிழ்ச்சியும் உனக்கும் இருக்கிறது. உன்னை சுற்றியில்லை.
109. இரும்பு இதயங்களுக்கான திறவுகோல் அன்பு.
110. பனி ஆக்கிரமித்தாலும், மலை அசைந்து கொடுப்பதில்லை.


111. முடியாது என்று நினைப்பதை முதலில் முயல வேண்டும்.
112. கலங்கினால் சேறு. தெளிந்நால் தான் நீர்.
113. அனுபவத்தைச் சேர்க்க தவறுகளைச் செலவு செய்ய வேண்டி வரலாம்.
114. ஏழைகளுக்கு எப்போதும் கிடைக்கும் உணவு... நம்பிக்கை.
115. மனதின் மாற்றம் தனிமையில் பிறக்கும்.


116. பிறரை வெல்பவன் புத்திசாலி, தன்னையே வெல்பவன் வீரன்.
117. எந்த தவறுமே செய்யாதவன் பெரிதாய் எதுவும் செய்திருக்க முடியாது.
118. சமயம் என்பது மனிதனின் உள்ளாற்றலை வெளிக்கொணர்வது.
119. எல்லா மிருகங்களும் வாழத் தெரிந்தவையே. மனிதனைத் தவிர.
120. விட்டுக்கொடுத்து வாழ்வதே இயற்கையின் விதி.


121. இதயத்தின் அழுக்கும் இசையில் வெளுக்கும்.
122. வெல்ல முடியாத போராட்டத்தைத் துவங்காதே.
123. தோல்விகள் மூலம் மேலும் புத்திசாலிகளாகிறோம்.
124. நல்லொழுக்கம் முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும்.
125. கொடுங்கோல் ஆட்சியை விட வனவாசம் மேல்.


126. பேச்சுத் திறன் என்பது கேளாதோரையும் கேட்க வைக்கும்.
127. மனம் நிரப்பப்பட வேண்டிய பாத்திரமல்ல, எரிய வேண்டிய சுடர்.
128. தலைமை என்பது மகுடமல்ல, கடிவாளம்.
129. நீ இதுவரை பெற்ற உதவிகள் யாவும் உன்னுள்ளிருந்தே பெற்றவை.
130. ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் மீண்டும் முயன்றுபார்.


131. கல்வியும், அனுபவமும் உள்ளவனை சூழ்ச்சி அண்டாது.
132. பிரச்சனைக்கு தீர்வு அதை எதிர்கொள்வது.
133. செய்தபின் வருந்துவதை விட செய்யாதிருத்தல் மேல்.
134. நடந்ததற்காக வருந்தாமல் முடிந்ததற்காக மகிழ்ச்சி கொள்.
135. நம்மைப் பலவீனமாகக் கருதுவதே பாவமாகும்.


136. உன்னை அறிவதால் மட்டுமே உனக்கு மகிழ்ச்சி.
137. காணும் உலகத்திற்கு எல்லையுண்டு. கற்பனை உலகத்திற்கு இல்லை.
138. எல்லா முய்சிகளும் ஏளனம் மற்றும் எதிர்ப்புக்குப் பின் ஏற்படும்.
139. அறிவு என்பது வார்த்தைகளில் இல்லை. அதன் பொருளில் உள்ளது.
140. பொறாமை என்பது தன்னையேத் தாக்கும் ஆயுதம்.


141. தரத்திற்கான ஓட்டத்திற்கு எல்லைக்கோடுகள் இல்லை.
142. அமைதியான உள்ளமே மகிழ்ச்சி கடலின் எல்லை.
143. கடவுள் சம்பளத்தை வாழ்க்கையின் முடிவில் தான் தருகிறார்.
144. சரியான தேரத்தில் நன்றி சொல்ல கற்றுக்கொள். அதுவே பேரின்பம்.
145. நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியான இடத்தை வகிப்பவை நல்ல நூல்களே.


146. தன்னம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
147. எதிலும் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருந்தால் தான் வெற்றி வரும்.
148. உன்னால் முடிந்தவரை உன் பணியை நன்றாகச் செய்.
149. நல்ல பணிகளுக்கு ஆணிவேர் பணிவுதான்.
150. பெருங்கூட்டமே, எப்போதும் தவறில் தான் இருக்கும்.


151. ஞானத்தின் சுடரொளியே முதுமொழியாகும்.
152. வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பாகும்.
153. சுழலும் உலகம் அனைவரையும் சுழற்றுகிறது.
154. விவேகம் வீரத்தின் சிறந்த பகுதி.
155. உனது ஆத்மாவை விடச் சிறந்த ஆசிரியர் இல்லை.


156. வெற்றிக்கு இன்றியமையாதவை தூய்மை, பொறுமை, விடாமுயற்சி.
157. எதிலும் போட்டியிருந்தால் தான் விரைவில் வளர்ச்சி அடைய முடியும்.
158. நீங்கள் செய்த பாவங்களை உணர்ந்து பிறரிடம் கூறுவதால் உங்கள் பாவம் குறையம்.
159. முதலில் உங்களை நீங்கள் மதித்தால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள்.
160. சினத்தைவிட ஒருவருக்குப் பகையானது வேறொன்றுமில்லை.


161. மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவருக்கு இறைவன் கருணை காட்டமாட்டார்.
162. கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டத்தை நம்பி உழைக்காமல் இருக்காதீர்கள்.
163. நீ நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
164. பிழையை சரிபடுத்திக் கொள்ள முயற்சி செய்வது அவமானம் ஒன்றுமில்லை.
165. இருப்பது எங்கானாலும் சிறப்பது நன்று.


166. தொடங்க எடுக்கும் முடிவே சாதனையின் துவக்கம்.
167. உன்னை வளர்ப்பது வசதிகள் அல்ல. சிரமங்களே.
168. சாலை வளைவு முடிவல்ல, அதை சென்றடையும் வரை.
169. இருமுறை உறுதி செய்து ஒரு முறை தாவு.
170. ஆனந்தம் என்பது பிறரை மகிழ்விப்பது.


171. ஏழுமுறை விழுந்தாலும் எட்டாவது முறை எழு.
172. இன்பத்தின் ரகசியம் நீ விரும்புவதல்ல. உன்னை பிறர் விரும்புவதே.
173. சந்தோஷம் ஒரு மென் விஷம். அளவைக் கடக்கும்போது.
174. பேசுவதற்கு மட்டுமல்ல. கேட்பதற்கும் ஆர்வம் கொள்.
175. விவாதம் அருமையானது வாக்குவாதம் வெறுமையானது.


176. தேவையற்ற செயலில் திறமையைச் செலவழிக்காதே.
177. முதுமையின் சுருக்கம் முகத்தில், முயலாமையின் சுருக்கம் அகத்தில்.
178. தோல்வி என்பது மீண்டும் துவங்க ஒரு வாய்ப்பு.
179. காற்று வீசட்டும் பாய்மரத்தைக் கட்டுப்படுத்து.
180. நல்ல புத்தகங்களை விரும்பாதவன் படிக்க தெரியாதவர்களுக்குச் சமம்.


181. நிரந்தர தேவையைத் தற்காலிக தேவைக்காக தள்ளுபவர் மூடர்.
182. பொருளைத் தவிர வேறு இல்லாதவனும் ஏழை தான்.
183. எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுங்கள்.
184. விதிகளை அறிந்தவன் இளைஞன். விதிவிலக்கு அறிந்தவன் வயோதிகன்.
185. இன்பச் சிரிப்பே இல்லத்தின் ஒளி.


186. கொடுத்தும் குறையாதது வாக்குறுதிகள் மட்டுமே.
187. துவங்கினால் முடிக்கவும், முடிக்கக் கூடியதையே துவங்கவும்.
188. சிலர் கறை பதிப்பர், நீ தடம் பதிப்பாய்.
189. ஒரு பிறவியானாலும் நேர்மையான வாழ்க்கை வாழ்.
190. நற்பண்பு தனக்குத் தானே பரிசாகும்.


191. முதலில் தகுதி பின்னர் தான் ஆசை.
192. வீரத்திற்கு சோதனை வருவது மடிவதற்கன்று, வாழ்வதற்கே.
193. இதயக் கண்ணாடி உடைந்தாலும், பிறர் காலை கீறிவிடாதே.
194. நம்பிக்கையே துரோகத்திற்கு வழி வகுக்கும்.
195. உழைப்பால் உடல் உள்ள நிறைவு உண்டாகும்.


196. வேலை செய்யவில்லை என்றால் வாழ்வு புனிதமாகாது.
197. சிந்தனையில்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது.
198. வாதாடப் பலருக்குத் தெரியும். உரையாட ஒரு சிலருக்கேத் தெரியும்.
199. மிகவும் மகிழ்ச்சியானது சிறந்ந நட்பு.
200. வாய்மையே புகழின் அடிப்படையாகும்.


201. புத்தகங்கள் இல்லாத வீடு, உயிர் இல்லாத உடலைப் போன்றது.
202. மெதுவாகப் பேசு. உன் இரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
203. நன்மையை நூறு பேர்கள் விரும்புவார்கள். உண்மையை சிலரே விரும்புவர்.
204. வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில் தான்.
205. அளவோடு இருந்தால் அவதிப்படத் தேவையில்லை எதிலும் தான்.


206. தோல்வி துயரம், துவங்காமை கேவலம்.
207. எந்தவிதமான இலட்சியமும் இல்லாதது எண்ணெய் இல்லாத விளக்குக்குச் சமம்.
208. அமைதியை விட மேலான ஆனந்தம் வேறெதுமில்லை.
209. உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதி தர முடியாது.
210. அச்சத்தை அடக்கி வையுங்கள், வீரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


211. உங்கள் அறிவில் பிறர் ஒளி பெற வேண்டும்.
212. ஒரு சுடரை அணைக்காமலே ஆயிரம் தீபங்கள் ஏற்றலாம்.
213. தவறான பதிலைக் காட்டிலும், மெளனம் சிறந்தது.
214. உண்மை ஒன்றே அசையாத அஸ்திவாரம்.
215. மன்னிப்பு என்ற பசையால் எதையும் ஒட்டலாம்.


216. மற்றவரை மகிழ வைப்பதே உன் மகிழ்ச்சிக்கு வழி.
217. புகழ்ச்சியால் அழிவதை விட இகழ்ச்சியால் வளரலாமே.
218. உன்னுடைய எல்லைகள் உலகுக்குப் பொருந்தாது.
219. தீர்த்து வைப்பதே பிச்சனையிலிருந்து தப்ப சிறந்த வழி.
220. தலை மேல் பறக்கட்டும், ஆனால் கவலைப் பறவைக் கூடுகட்டக் கூடாது.


221. நம் கனவை நம்புகிறவர்கள் வசம் எதிர்காலம் இருக்கும்.
222. சிலர் வெற்றி கனவு காண்பர். சிலர் விழித்து உழைப்பர்.
223. தோல்வி இருவகை. நினைத்தும் நடக்காதது, நடந்தும் நினைக்காதது.
224. வளர்ச்சி காலவரையென்னும் வட்டத்துக்குள் அடங்காது.
225. இல்லாமையில் மோசமானது கல்லாமை.


226. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்.
227. பாதையில்லாத போதும் உன் சுவடுகளைப் பதியவை.
228. அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு.
229. நினைவாற்றலே கற்பனைக்கு உணவளிப்பது.
230. உதவிக்கரமா? உன்னிடம் இரண்டு உள்ளன.


231. மனிதன் நினைக்கிறான். கடவுள் முடிக்கிறார்.
232. அழிவே இல்லாத ஒரே சொத்து கல்வி மட்டுமே.
233. சுயமரியாதை என்பது ஒழுக்கத்தில் பழுத்தக் கனி.
234. இயற்கையுடன் இணைவதே வாழ்வின் குறிக்கோள்.
235. மெளனம் புரியாதவர்க்கு பேசவும் தெரியாது.


236. எதிரிகளை ஒழிக்க அவர்களை நண்பர்களாக்குங்கள்.
237. நேர்மையான கருத்து வேறுபாடும் முன்னேற்றமே.
238. தன்னடக்கத்தின் நீண்ட பாடமே வாழ்க்கை.
239. அடக்கமற்றவனுக்கு அழகான வார்த்தை அடங்காது.
240. படித்துப் பெறுவது கல்வி, படிக்காமல் பெறுவது அனுபவம்.


241. அயர்ந்துவிடாதே; வெற்றிக்கு இன்னும் சிறிது தூரம் தான்.
242. சறுசுறுப்போடு இயங்கும் போது தான் மனிதன் ஒளிர்கிறான்.
243. பாராட்டுங்கள்; யாருக்கும் பாராட்டுப் பிடிக்கும்.
244. மற்றவரை மகிழ வைப்பதே உன் மகிழ்ச்சிக்கு வழி.
245. தனக்கே உதவாதவன் பிறருக்கு என்ன செய்வான்?


246. சொல்பவனை விட சொன்னதையே ஆராய வேண்டும்.
247. சூழ்ச்சியில் சேர்த்த செல்வம், பச்சை மண்குடத்து நீர் போல.
248. எதிரியை விட நாக்கையே அதிகம் அடக்க வேண்டும்.
249. நீ விழும் வரை விட்டு வைக்குற நண்பன் உன் விரோதி.
250. நம் செயல்கள் சுவரில் எறிந்த பந்துகள்.


251. வந்த வழியை மறவாதிருந்தால் எந்த பதவியும் பறிபோகாது.
252. கோபம் அறிவீனத்தால் தொடங்கி துக்கத்தில் முடிகின்றது.
253. மிகவும் விரயமாக்கப்பட்டது சிரிக்காத நாள் மட்டுமே.
254. வெற்றிக்கான சாலையில் தொடர்ந்து வேலை நடந்துவரும்.
255. பிறந்தது வாழ்வதற்காக, வாழ்வது அன்பிற்காக.


256. முன்மொழிவது மனிதன். முடிவு சொல்வது இறைவன்.
257. புரட்சிகள் என்னாளும் பின்னோக்கி செல்வதில்லை.
258. பிறர் மனம் புண்படாத பேச்சு – தலைசிறந்த தவம்.
259. அறிவுடைமை வரம், அறியாமை சாபம்.
260. ஆதவன் உதிப்பதற்கு ஆருடம் பார்ப்பதில்லை.


261. மறப்பதற்கு சிரிக்க வேண்டும், சிரிப்பதற்கு மறக்க வேண்டாம்.
262. வாசிப்போர் ஏராளம்! யோசிப்போர் குறைவு.
263. அமைதியை விரும்புவோர் எதிரியிடம் கேட்க!
264. ஒரு நாளின் சந்தோஷம் அறுவடையில் அல்ல, அதை விதைப்பதில்.
265. மூடன் தூரத்தில் தேடும் மகிழ்ச்சி, அறிவாளியின் காலடியில்.


266. அதிருப்திக்கு எல்லாமே வேர் சுயநலமே.
267. நோயின்மை மட்டும் உடல் நலமாகாது.
268. ஆயிரம் களம் நெல்லை அழிக்க ஒரு அந்துப்பூச்சி போதும்.
269. இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
270. ஈடுபாட்டுடன் செய்யும் வேலையே நேர்த்தியாக முடியும்.


271. தவறான பாதையில் வெகுதொலைவில் வந்தாலும் திரும்பிச்செல்.
272. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
273. தன்னைக் காக்கிற கோபத்தைக் காக்க வேண்டும்.
274. பூமியைப் போல பொறுமை வேண்டும்.
275. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.


276. வறுமையுள்ளவர்க்குப் பொறுமையுண்டு.
277. தன் நிழல் தன்னைக் காக்கும்.
278. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
279. இரக்கமில்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடிது.
280. இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்.


281. அடக்கம் ஆயிரம் பொன் பெறும்.
282. கடவுளை அறிவதுதான் உண்மை அறிவு.
283. கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.
284. சிறந்த பணிவே அறிவுடைமையின் உயர்ந்த அடையாளம்.
285. பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.


286. பண்பாடு ஆரவாரமற்றது. அமைதியானது.
287. சத்தியம் உள்ள இடத்தில் தான் மெய்யறிவு இருக்கும்.
288. நல்லொழுக்கம் பகைவரையும் வென்று விடுகிறது.
289. அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.
290. சட்டங்கள் அழியலாம், புத்தகங்கள் அழிவதில்லை.


291. பேராசை முடிகிற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.
292. முடியாது என்பது முயலாதது மட்டுமே.
293. கோபமுள்ள இடத்தில் தான் குணம் உண்டு.
294. கல்வி இல்லாதவன் இருளில் நடப்பவன்.
295. பழையச் சொற்கள் அறிவுக் களஞ்சியம்.


296. உள்ளம் நிறைந்து விட்டால் உதடும் பேசும்.
297. எதையும் எதிர்பாராதவனே அதிர்ஷ்டக்காரன்.
298. நம்பிக்கை செழிப்பைத் தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
299. உற்சாகம் இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது.
300. அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும் உழைப்பால் வரும்.


301. பொறுமை என்பது கடவுளின் வெகுமதி.
302. எப்போதும் கூட்டத்தில் யாருக்கும் புத்திமதி கூறாதே.
303. பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.
304. இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
305. விடாமுயற்சிக்கு சொந்தமானது வெற்றி.


306. அமைதி இருக்கும் இடத்தில் தெய்வம் இருக்கும்.
307. உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.
308. மிக சுருக்கமான பதில் செய்கையே.
309. எந்த துயரத்தையும் தாங்குபவள் பெண்.
310. இன்றைய பணியை இன்றே செய்வோம்.


311. நன்றி செலுத்த வேண்டியது ஒரு கடமை.
312. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாக பாயும்.
313. நண்பர்கள் மனிதனின் குணத்தைக் காட்டும் கண்ணாடிகள்.
314. மௌனம் எப்போதும் மிக நல்ல பதிலே.
315. துன்பங்கள் இல்லாமல் ஆதாயங்கள் கிடையாது.


316. உன் துணிவைப் பகிர்ந்து கொள்.
317. முயற்சி என்பது நம்மால் முடியாது என்று நினையாதிருப்பது.
318. பல எண்ணங்கள் இருப்பின் ஒரு நல்ல எண்ணம் பிறக்கும்.
319. அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்வர்.
320. பிறரின் அன்புக்கு உரியவராவதே பெருமகிழ்ச்சி.


321. முயற்சியுடைமை செல்வம் தரும், சோம்பல் வறுமை தரும்.
322. அன்பு குறைந்த இடத்தில் குற்றங்கள் பெரியதாகத் தெரியும்.
323. இலக்கியம் என்பது சிறிய நினைவுகளின் பதிவேடு.
324. கற்பிப்பது இரண்டு முறை கற்பதற்குச் சமம்.
325. தவிர்க்கப்படும் கடமைத் தள்ளிப் போடப்படும் கடனாகும்.


326. சரித்திரம் படைக்கும் மனிதனுக்கு அதை எழுத நேரமில்லை.
327. தெளிவான குறிக்கோளை நோக்கி முயற்சி செய்.
328. உண்மை பலம் வாய்ந்ததாக இருந்தால் அது ஜெயிக்கும்.
329. உழைப்பு எல்லாவற்றையும் வெல்லுகிறது.
330. ஒவ்வொரு நாளும் ஒரு முழு வாழ்நாளுக்குச் சமம்.


331. வீரம் என்பது ஆற்றல் அல்ல, உள்ளத்தின் பண்பு.
332. அமைதியாக இருங்கள், எவரையும் வசப்படுத்தி விடலாம்.
333. எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.
334. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
335. அன்னைக்கு உதவாதவன், யாருக்கும் உதவமாட்டான்.


336. மற்றவர் பயன்பெற வாழ்வதே வாழ்க்கை!
337. பிழையின்மை நேர்மையின் இரட்டைச் சகோதரன்.
338. இன்றைய ஒரு நாள் நாளைய இரண்டு நாட்களுக்குச் சமம்.
339. ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்.
340. மகிழ்ச்சி என்ற பெரிய பழத்தை விட நம்பிக்கை என்ற மிகச்சிறிய விதை சிறந்தது.


341. சிந்தனை செய்யாமல் படிப்பது ஜீரணம் செய்யாமல் உண்ணுவதற்குச் சமம்.
342. படிப்பது நல்வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு மூலக்கருவி.
343. பணத்தின் மேல் ஆசை எல்லாத் தீங்குகளுக்கும் ஆணிவேர்.
344. ஒன்றுக்குமே கடன்பட்டிருக்காதவன் எவனோ அவனே செல்வந்தன்.
345. வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்திற்கு மருந்தில்லை.


346. எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பது மேல்.
347. நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடி வரும்.
348. நூல்களும், நண்பர்களும் குறைவாகவும், தரமாகவும் இருக்கவேண்டும்.
349. நம்மை ஏமாற்றாத நல்ல நண்பன் புத்தகம்.
350. எதிரிக்குப் பதில் அளிக்குமுன் அவனைப் புரிந்துகொள்.


351. சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.
352. துன்பங்கள் இல்லாமல் ஆதாயங்கள் கிடையாது.
353. வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்.
354. குறைந்த வார்த்தைகள் மேலான பிரார்த்தனையாகும்.
355. சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.


356. மிக நல்ல மதம் அதிகச் சகிப்புத் தன்மை கொண்டது.
357. நல்ல மனிதன் ஒருபோதும் செடியைப் புண்படுத்த மாட்டான்.
358. இயற்கை, காலம், பொறுமை இம்மூன்றும் தான் பெரிய மருத்துவர்கள்.
359. ஒரு மனிதனுடைய நல்லதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் அவன் மனைவியே.
360. மனிதர்கள் பலம் இல்லாமல் இல்லை, மனமில்லாமல் இருக்கிறார்கள்.


361. ஒரு பலவீனமான உடல், மனத்தையும் பலவீனப்படுத்துகிறது.
362. தவறு செய்வது மனிதத்தன்மையது. மன்னிப்பது தெய்வீகமானது.
363. நல்ல மனையாளும் ஆரோக்கியமும், மனிதனின் சிறந்த செல்வமாகும்.
364. எவனொருவனுக்கும் தற்போதைய நிலை மகிழ்ச்சியான நிலையல்ல.
365. மூடன் கடைசியாகச் செய்வதை, ஞானி முதலில் செய்கிறான்.


366. ஒவ்வொரு காரியத்திலும் நாம் முடிவைக் கவனிக்க வேண்டும்.
367. அளிக்கப்பட்ட வாக்குறுதி செலுத்தப்படாத கடன்.
368. மனவலி உடல் வலியை வட மோசமானது.
369. தோல்வியின் கடைசி புகலிடம் தான் முன்னேறும் ஆசை.
370. தொடக்கத்தை விட முடிவைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.


371. வாழ்க்கை என்பது செயல், தியானம் அல்ல.
372. தொலைதூரம் தான் வியப்பை அதிகப்படுத்தும்.
373. பொறுமை காத்தவன் வெற்றி பெறுகிறான்.
374. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு அவசியம்.
375. வேலை செய்யத் தெரியாதவனுக்கு ஆயுதம் மோசம்.


376. எல்லாமே ஒரு நாள் வேலையில் இருக்கிறது.
377. அநேக உண்மைகள் வேடிக்கை பேச்சில் வெளியாகிவிடும்.
378. நல்ல பழமொழி எந்நேரமும் பயன் தரும்.
379. பணிவு இல்லையேல் மனிதகுலம் இருக்க முடியாது.
380. தவறான ஆட்சியினால் மிகப்பெரிய சக்தி இழக்கப்படலாம்.


381. வரம்பற்ற அதிகாரம், அதை உடையவரைக் கெடுக்கிறது.
382. பணம் அறிவாளிக்குத் தொண்டு புரிகிறது, முட்டாளை ஆட்சி செய்கிறது.
383. குறைந்த அறிவு, அதிக அவநம்பிக்கை.
384. கடவுள் நிந்தனை என்று ஒன்று இருந்தால் அது அநீதி தான்.
385. அதிர்ஷ்டமும், அன்பும் வலியோரை நட்புறுகிறது.


386. எப்போதும் கூட்டத்தில் யாருக்கும் புத்திமதி கூறாதே.
387. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது.
388. நல்ல ஆடைகள் எல்லாக் கதவுகளையும் திறக்கின்றன.
389. ஒவ்வொரு ஆரம்பமும் கடினம் தான்.
390. இயற்கையின் நடையைப் பின்பற்று, அதன் இரகசியம் பொறுமை.


391.நீண்டகாலம் வாழ விரும்பினால் இதயத்தைத் திற.
392. அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
393. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
394. கவனமும், முயற்சியும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
395. சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும்.


396. மிகப்பெரிய நோக்கத்தைக் காட்டிலும் மிகச்சிறிய செயல் மேலானது.
397. எளிமையாக இருப்பது தான் உண்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும்.
398. ஒவ்வொரு நாளும் ஒரு முழு வாழ்நாளுக்குச் சமம்.
399. காலத்தை தவிர வேறொன்றும் நமக்கு சொந்தமில்லை.
400. தன்னைத் தானே ஆளாதவன், தனக்குத் தானே பகைவன்.


401. மற்றவர்களை சந்தோஷப்படுத்துபவனே உண்மையில் சந்தோஷப்படுகிறான்.
402. உண்மையான மனபேதங்கள் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு அறிகுறி.
403. நல்லெண்ணம் கொள்வது இறைவழிபாட்டின் ஓர் அங்கமேயாகும்.
404. மேன்மையை நாடிச் செல்பவனுக்கு சிறு குறைகளும் இருக்காது.
405. ஆலோசனைக்கு பின்னரே எல்லாச் செயல்களையும் தொடங்க வேண்டும்.


406. உன் கடமையைச் செய்; உனக்கு வேண்டியவைத் தவறாது கிடைக்கும்.
407. உண்மையான அன்புக்காக கொஞ்சநேரம் நடிக்கலாம்.
408. நியாயமான கோபத்தை வீணாகச் செலவழித்து விடாதே.
409. தேவையற்ற பணம் பல பாவங்களைச் செய்ய உன்னைத் தூண்டும்.
410. உன்னோடு எப்பொழுதும் வாழப்போகும் ஒரே நண்பர் கடவுள் ஒருவரே.


411. கனவு என்பது உனது வாழ்வின் முடிவு அல்ல, ஆரம்பமே.
412. பிறருக்கு உதவி செய்வதே வாழ்க்கை.
413. சுறுசுறுப்புடன் செயல்படுகிறவனுக்கு இந்த உலகம் சொந்தம்.
414. வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக இருப்பதே.
415. மலர்கள் மலர யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருப்பதில்லை.


416. எல்லாரும் பார்த்து ரசிக்கும் மலர்போல வாழக் கற்றுக்கொள்.
417. வார்த்தைகள் முக்கியமல்ல, அர்த்தங்கள் தான் முக்கியம்.
418. வீரமும், அடக்கமும் ஓரிடம் இருப்பதே சிறப்பு.
419. பிறர் மனம் புண்படாத பேச்சு - தலைச்சிறந்த தவம்.
420. முயற்சி செய்வது தோல்வியிலும் முத்திரை பதிக்கும்.


421. வெற்றியின் விலாசம் விடாமுயற்சி.
422. ஆயுளை நிர்ணயிப்பது செயல்கள், ஆண்டுகள் அல்ல.
423. நண்பர்கள் - மனிதனின் குணத்தைக் காட்டும் கண்ணாடிகள்.
424. நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். அது கொலைக்கு நிகரானது.
425. ஒரு மனிதனின் வாழ்க்கை, அவன் வாழ்ந்த விதம் கொண்டுதான் கணக்கிடப்படுகிறது.


426. அமைதியான உள்ளமே மகிழ்ச்சி கடலின் எல்லை.
427. சினத்தை விட ஒருவருக்குப் பகையானது வேறொன்றுமில்லை.
428. மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவருக்கு இறைவன் கருனை காட்டமாட்டார்.
429. நல்ல பணிகளுக்கு ஆணிவேர் பணிவு தான்.
430. பெருங்கூட்டமே எப்போதும் தவறில் தான் இருக்கும்.


431. முதலில் உங்களை நீங்கள் மதித்தால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள்.
432. ஞானத்தின் சுடரொளியே முதுமொழியாகும்.
433. எதிலும் போட்டியிருந்தால் தான் விரைவில் வளர்ச்சி அடைய முடியும்.
434. உனது ஆத்மாவை விடச் சிறந்த ஆசிரியர் இல்லை.
435. விவேகம் வீரத்தின் சிறந்த பகுதி.


436. வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பாகும்.
437. உன்னை அறிவதால் மட்டுமே உனக்கு மகிழ்ச்சி.
438. நம்மைப் பலவீனமாகக் கருதுவதே பாவமாகும்.
439. நடந்ததற்காக வருந்தாமல் முடிந்ததற்காக மகிழ்ச்சி கொள்.
440. செய்தபின் வருந்துவதை விட செய்யாதிருத்தல் மேல்.


441. காணும் உலகிற்கு எல்லையுண்டு, கற்பனை உலகிற்கு இல்லை.
442. பொறாமை என்பது தன்னையேத் தாக்கும் ஆயுதம்.
443. தரத்திற்கான ஓட்டத்திற்கு எல்லைக்கோடுகள் இல்லை.
444. எதிலும், எப்போதும் மிகவும் கவனத்துடன் இருந்தால் தான் வெற்றி வரும்.
445. சரியான நேரத்தில் நன்றி சொல்ல கற்றுக்கொள், அதுவே பேரின்பம்.


446. இருட்டு வந்து விட்டால் குருடனும், கண் உள்ளவனும் ஒன்று தான்.
447. இருப்பதை கொண்டு திருப்தி அடைபவனே அகில உலகத்திலும் பெரும் பணக்காரனாவான்.
448. தன் காலிலே நடப்பது நல்லது. அடுத்தவன் முதுகில் ஏறிப் போவது ஆபத்து.
449. துன்பத்தை சகித்து கொள்ளும் மனிதரே இன்பத்தை அனுபவிக்க தயாராகிறான்.
450. தர்மம் செய்ய முடியாவிட்டாலும், தர்மம் செய்வதை எப்போதும் தடுக்க கூடாது.


451. தனக்காக உழைப்பது தனத்தை சேர்க்கும், பிறருக்காக உழைப்பது புகழை சேர்க்கும்.
452. தனது நினைவாற்றலில் நம்பிக்கை அற்றவர்கள் மறந்தும் பொய் சொல்லக் கூடாது.
453. தான் தேடிய பொருள் உத்தமம். தகப்பன் தேடிய பொருள் மத்திமம்.
454. தலைவர்களுக்கு அழகு நீதியுடன் இருப்பது. செல்வர்க்கு அழகு தர்மம் செய்வது.
455. தலைவனாக ஆக விருப்பமுள்ளவன் முதலில் தொண்டனாக இருக்க வேண்டும்.


456. தனக்கு உரிமை இல்லாத பொருளை எடுத்தால் அதன் விளைவு ஆபத்து.
457. தவளை தாமரைக்கு அருகில் இருந்தாலும் அதற்கு தேன் சுவை தெரியாது.
458. தவறான வழியில் சேர்த்த பணம் விரைவில் அழிந்து விடும்.
459. துஷ்டனுக்கும், தூசிக்கும் வெகு தூரம் விலக வேண்டும்.
460. கடமையை செய்யாமல் நடப்பதெல்லாம் விதிவசம் என்பது சோம்பேறிகளின் வீண்வாதம்.


461. கடமையைச் செய்ய நேரத்தை கடத்தினால் அரிய வாய்ப்பும் பறந்து விடும்.
462. கடவுள் இல்லை என்று ஒருவன் நினைப்பானானால் அதுவும் கடவுள் செயலே.
463. குடித்திருப்பவரோடு விவாதம் செய்தால் உங்களில் யார் குடித்தவர் என்பது புரியாது.
464. கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனை வெற்றிக்கு அடிப்படை.
465. கல்வியே உற்ற தோழன் ஆவான். துணிவே உடன் பிறந்த சகோதரன் ஆவான்.


466. கல்மனம் படைத்த நண்பனை விட கொலைகாரன் என்றும் கொடியவனல்ல.
467. கஷ்ட காலத்தில் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்றாலும் நாய் கடிக்கத்தான் செய்யும்.
468. கஷ்டம் வரும் போது நாலு பேரிடம் சொன்னால் கண்டிப்பாக நல்ல வழி பிறக்கும்.
469. கஷ்டங்கள் உண்மைகளை புரிய வைக்கும். இரவுகள் நட்சத்திரங்களை தெரிய வைக்கும்.
470. கஷ்டங்கள் வரும் முன்பே மனத்தை திடப்படுத்திக் கொள்பவன் அறிவுள்ளவன்.


471. பட்டம் பெறுவதை விட, அதனைப் பேணிக் காப்பதே சிறப்பு ஆகும்.
472. பயப்படாத மனிதன் உண்டு. ஆனால் வெட்கப்படாத மனிதன் கிடையாது.
473. பழம் இருக்கும் மரத்தைப் பார்த்துத்தான் கற்களை வீச வேண்டும்.
474. பாவம் செய்தோர் செய்வது பரிகாரம், மனிதனுக்கு மனிதன் செய்வது உபகாரம்.
475. பாராமல் கெட்டது பயிர், சேராமல் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்.


476. பகைவரை அளவுடன் பகைத்தால் அவரும் ஒரு நாள் நண்பராகி விடலாம்.
477. படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தினால் அது அறிவின் வாசல்.
478. படிப்புக் கல்வியும், அனுபவக் கல்வியும் இல்லாத வீடு இருண்ட வீடு.
479. பச்சை குழந்தைகளின் கேள்விகளுக்கு மகா அறிவாளி கூட பதில் கூற முடியாது.
480. பஞ்சில் படியும் தீப்பொறியை விட மனதில் படியும் துவேஷம் விரைந்து பரவும்.


481. பலம் பொருந்திய நூறு கைகளை விட ஒரு நல்ல மூளையே சிறந்தது.
482. பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்ப்பதை விட செலவுகளை குறைத்தாலே போதும்.
483. பணக்காரனை ஒழித்து விடுவதால் ஏழை பணக்காரனாக ஆக முடியாது.
484. பணம் போனால் திரும்பி விடும். ஆனால் மானம் போனால் போனது தான்.
485. பணம் புத்திசாலிக்கு உழைக்கும் ஆனால் முட்டாளை அது ஆட்கொள்ளும்.


486. பணத்தின் மதிப்பை அறிய யாரிடமாவது கடன் கேட்டுப்பார்.
487. பணத்தை விட நல்ல அறிவும், நல்ல ஒழுக்கமும் மிகவும் உயர்ந்தது.
488. இன்பம் பனித்துளி போன்றது. அது சிரிக்கும் போதே உலர்ந்து போய் விடும்.
489. இன்பமும், துன்பமும் வரும் போகும், ஆனால் வந்தால் போகாதது புகழும், பழியும் ஆகும்.
490. இன்று நாம் செய்யக் கூடிய நன்மை தான், நாளை நன்மை தரக் கூடியதாகும்.


491. இனிப்பு உடலைக் கெடுப்பது போல், பதவி நல்லவனையும் கெடுத்து விடும்.
492. இயற்கையின் விதிகளை மீறுவதற்கு அது அளிக்கும் தண்டனையே நோய்.
493. இயல்பாய் வருவது பேச்சு. அது போல் அறிவால் வருவது வருமானம்.
494. இளமையில் சேமித்தால் அது நம்மை முதுமையில் காப்பாற்றும்.
495. இரக்கம் காட்டு, ஏமாந்து போகாதே. வீரனாக இரு, போக்கிரியாக இராதே.


496. இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும். நாணயமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்.
497. நல்ல இதயம் பல கவலைகளை வெல்லும்.
498. நல்லதை எடுத்துக் காட்டுவதே விமர்சனத்தின் நியாயமான குறிக்கோளாகும்.
499. நல்லவற்றைக் கூட்டிக் கொள்ள வேண்டும். தீயவற்றைக் கழித்துக் கொள்ள வேண்டும்.
500. விரும்பியதை செய்வது சுதந்திரம், செய்வதை விரும்புவது சந்தோஷம்.


501. நூறு சதவிகித ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் வீணாவதில்லை.
502. கண்ணை இமை காப்பது போல் தான் மண்ணை மரம் காத்துக் கொள்ளும்.
503. கண்டிப்புடன் நடந்து கொண்டால் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை.
504. குற்றமற்ற பொருளை காண முடியாது. அப்படி ஒரு பொருள் இருப்பதாக தெரியவில்லை.
505. களி மண்ணால் பல பாத்திரங்கள் உருவாவது போல் கடவுளுக்கு பல அவதாரங்கள்.


506. காதல் என்பது ஐஸ்கட்டி. வாழ்க்கை எனும் வெயிலில் வைத்தால் கரைந்து விடும்.
507. காலத்தின் மதிப்பு உனக்குத் தெரிந்தால் வாழ்வின் மதிப்பும் தெரிந்து விடும்.
508. குறைந்த பேச்சு, அதிக மௌனம் இவைகளை பெண்கள் இடத்தில் காண்பது அரிது.
509. கடன், புண், தீ இவற்றில் எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.
510. கடந்த காலத்தை எண்ணாமல் நிகழ்காலத்துக்கு சிந்தனை செய்தலே நல்லது. 


511. எண்ணம் திருந்துமானால் எல்லா திருத்தமும் ஏற்படும்.
512. எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது.
513. எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும் போது ஏமாற்றம் அதிகமாக இருக்காது.
514. எந்த முடிவும் பரிசீலனைக்குரியதே, ஜனனத்தையும் மரணத்தையும் தவிர.
515. ஒரு பணக்கார நோயாளியை விட ஆரோக்கியமான ஏழை மிகவும் அதிர்ஷ்டசாலி.


516. ஒரு துளி பேனா மை பத்து லட்சம் பேர்களை சிந்திக்க வைக்கும்.
517. ஒருவர் புத்திசாலியாக இருந்தால் இருவர் ஆனந்தமாக இருக்கலாம்.
518. ஒருவனாய் பிறந்தால் தனிமை. இருவனாய் பிறந்தால் பகைமை.
519. எல்லாம் வேடிக்கைதான்! நமக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நடக்கும் வரை.
520. மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அருசுவை உணவாக்கி விடும்.


521. முதுகுக்குப் பின்னால் ஒரு காரியம் செய்யலாம், முதுகைத் தட்டிக் கொடுப்பதுதான்.
522. முறிந்த கையைக் கொண்டு உழைக்கலாம், ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது.
523. உன் வாழ்வை பிறர் வாழ்வுடன் ஒப்பிடாவிட்டால் மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவிக்கலாம்.
524. பொறாமை என்பது இயலாமைக்கும் அதீதமான கற்பனைக்கும் பிறக்கிற குழந்தை.
525. ஆரோக்கியமான போட்டி நிலவுகிற இடத்தில் பொறாமை எட்டிக்கூட பார்க்காது.


526. சோர்விலாத முயற்சி கொண்டவர்க்கு செல்வம் தேடி வந்து சேரும்.
527. வேசியைப் போல் வேட்கை கொண்டவன் காசுக்காக கொலையும் செய்வான்.
528. வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்படுவதே நல்லது.
529. அரசாங்கம் பல அதிகாரிகளை உருவாக்க முடியும். அறிஞர்களை உருவாக்க முடியாது.
530. அறம், அன்பு, வாய்மை, பொறுமை இந்நான்கும் நல்வாழ்வுக்கு நான்கு தூண்கள்.


531. நோயினால் மெலிவதை விட நோன்பினால் மெலிந்து விடுவது நல்லது.
532. கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
533. கோபத்தை விட்டவன் துயரப்பட மாட்டான். பேராசையை விட்டவன் சுகம் இழக்க மாட்டான்.
534. கோபத்தை அன்பால் வென்றிடுக. பாசத்தை விவேகத்தால் வென்றிடுக.
535. பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான். 


536. பேசுமுன் கேளுங்கள், எழுதுமுன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
537. பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி அங்கிருக்காது.
538. தேர்தலில் முட்டாள் பரீட்சை எழுதுகிறான். குற்றவாளி வெற்றி பெறுகிறான்.
539. சூதாட்டத்தில் வெற்றியடைந்தால் அவன் ஒர் எதிரியைப் பெறுகிறான் என்று பொருள்.
540. தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைய முடியும்.

The best revenge is to move on.. Get over it, and continue to succeed. Never give someone the satisfaction of watching you suffer


15 sentences that will empower you to move forward and to aim him.

Never compare your weaknesses to other people’s strengths.
Own your life, or someone will own it for you.
We cannot change the cards we are dealt, just how we play the hand.
Climb mountains not so the world can see you but so you can see the world.
If you accept your limitation, you go beyond them.
Comfort is the enemy of achievement.
No matter anyone says to you,you don’t have to eat dinner with them, live with them or go to bed with them.
If you risk nothing, you risk everything.
Don’t give others the power to control your emotion. Those are only yours and it is only for you to manipulate.
Victory introduces you to the world, but defeat introduces the world to you.
If you don’t do stupid things while you are young,you will have nothing to smile about when you are old.
Don’t waste your time with explanation,people only hear what they want to hear.
Don’t rest after your first victory,because if you fail the second time,more lips will be waiting to say that your first victory was just luck.
Everyone thinks of changing the world,but no one thinks of changing themselves.
The person that you will spend most time with in your life is yourself, so better try to make yourself as interesting as possible.

Riley Curry reminding voters who to vote for next year.

Bapurao Tajne - Just Damn Dig It

Bapurao Tajne, a Dalit from Washim district was crestfallen when his wife was not allowed to take water from a well in his village. Burning with rage and anger, he bought few tools, and started digging a well right inside his village.

No hydrological study was conducted, he had no experience in digging wells, and it was an impossible rocky terrain. His neighbours mocked him, wife asked him to forget his ego, and live like another poor man who has to swallow insults.

For 40 days, he continued digging, without any hope of discovering water. He was a daily wager, and 2 hours before going to work, and 4 hours after coming from work, he continued digging, with the same rage and anger of being denied water, just because he is a Dalit.

On 41st day, he discovered water after digging 15 feet. Nana Patekar called him to congratulate, local tehsildar gave him bouquet, and a Marathi channel has covered his feat.

Besides being a real story of incredible determination, its a symbolic omen for those, who either blame luck for their misfortune, or curse the 'market', 'economy' and 'lack of VC money' for their inaction or so called failure (I still wonder what exactly is success or failure, when everything is a subjective matter!)

The new motto should be, 'Just damn dig it', because this is success.



வீட்டின் தண்ணீர் தொட்டி கறுப்பு நிறத்தில் வாங்க வேண்டாம். வெள்ளை நிறத்தில் வாங்குவதே நல்லது.கறுப்பு நிறம் சூரிய ஒளியை அப்படியே உள்ளிழுத்து தண்ணீரை சூடாக்கி வெப்பத்தால் உண்டாகும் அனைத்து கெடுதிகளையும் செய்கிறது.

வெள்ளை நிற தொட்டிகள் சூரிய ஒளியை பிரதிபலித்து தண்ணீர் சூடாகாமல் இருக்க உதவுகிறது.மேலும் புற ஊதாகதிர்களால் தண்ணீர் கெட்டு விடாமலும் பாதுகாக்கிறது.


வெயிலில் சூடான நீரில் குளிப்பதால் தோல்நோய்கள் வருகின்றன..மாலை நேரத்தில் குளிக்கவே முடியாது.அனலாய் கொதிக்கும்.


ஏற்கனவே கறுப்பு தொட்டி வைத்திருப்பவர்கள் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து விடுங்கள் ..அல்லது சுண்ணாம்பு கெட்டியாக கரைத்து பெவிக்கால் கொஞ்சம் கலந்து அடித்து விடுங்கள்

வாழ்க்கை சுகமா இருப்பதற்கான பாஸிடீவ் வார்த்தைகளும் செயல்களும்...

’இன்னமும் என் மேல என்ன பயம்; மரியாதை. ச்சும்மா வாடிபோடின்னு சொல்லிப் பேசு’ன்னு புதியபாதை படத்துல சீதா சொல்லுவாங்க. உடனே பார்த்திபன், ‘வாடின்னா வேணும்னா சொல்றேன். போடின்னு சொல்லமாட்டேன்’னு சொல்வார். நச்சுன்னு இந்த டயலாக் அப்ளாஸ் வாங்கும்!
‘எங்கேயாவது போயிரு சப்பாணி’ன்னு மயிலு சொல்லும்போது, ‘செத்துபோன்னு வேணா சொல்லு, செத்துப் போயிடுறேன். விட்டுட்டுப் போன்னு சொல்லாதே மயிலு. நான் எங்கே போவேன்’னு கதறுவார் சப்பாணி.

கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, வாழ்க்கை சுகமா இருப்பதற்கான பாஸிடீவ் வார்த்தைகளும் செயல்களும் இதுதான்னு தோணுது! 
அன்பு இருக்கற இடத்துல, கடுப்பு, கோபம், ஈகோ, ஆத்திரம் எதுக்குமே இடமில்லை. இந்த அன்பு... ஒப்படைத்தலால் வர்றது! கூடுமானவரைக்கும் ஒப்படைத்து வாழ்வோம்!

Source: Facebook.com

One of the marks of superior people is that they are action-oriented - Brain Tracy Quotes

"One of the marks of superior people is that they are action-oriented. One of the marks of average people is that they are talk-oriented." — Brian Tracy

Plus 2: Tamilnadu 12th Result 2016 TN Results Plus Two HSC Public Exam

plus 2 result 2016 tamilnadu

Tamil Nadu +2 result latest news: TN state board plus two (12th) public examination conducted in March 2016 all over state for both regular and private candidates by DGE. The Tamilnadu 12th result 2016 expected to be announced today. Usually paper correction and processing of results will take 40 to 45 days. 

Plus Two Results 2016 Tamilnadu

List Of 12th Result 2016 Website Online

www.kinindia.net
tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
dge3.tn.nic.in
tndge.in

How To Check plus two OR 12th Result 2016 In Online ?

Visit this page on the day of TN 12th results.
Click on the link provided above.
Enter registration number (exam no) and date of birth (DOB).
Submit and get the Tamil Nadu 12th result 2016.
Take print out or screenshot if needed.
Note: To check class 12 results, number and date of birth is required

What is the best career advice for a software developer to earn higher total compensation?

Here's a few things I think are important.

Switch companies, but not too often. Try to move after getting a promotion or finishing a project. It shows you complete things, and you get rewarded for your efforts. But you do need to switch companies to maximize compensation. Otherwise you're paid what it takes to keep you, not what it would take to acquire you (which is generally higher).

Don't quit your job before you have a new one. Your existing position and compensation let you negotiate from a position of strength, and look more desirable in a candidate.

Interview with at least two companies when moving. Ideally you want offers from both companies, and for each to be aware you're interviewing elsewhere. You'll get a better initial offer, and they'll be more willing to negotiate.


Be good at your job, and get results. You want people to know you as 'that guy who always makes progress and gets things done.' That's the sort of person who gets recommended when someone who knows you moves and is asked "who else should we be recruiting?"


Network. Networking gets you presented with opportunities you wouldn't have otherwise. It won't usually get you a job you don't deserve, but it WILL move you to the front of the line for being evaluated. You don't have to be a social butterfly, just take the time to get to know the people you work with, be helpful, and learn about what they're doing - which are all good things to do anyways.


Be willing to relocate. If you want to follow the almighty dollar, you may need to do some moving around for the best opportunity in each case.


Don't forget to enjoy your career and your life while you're doing this.


----------------------------------------------------------------------------------------------------

1) Increasing skill sets alone is of little use if you cannot market them. Market your skill sets. Two things to keep in mind here:

 a) Invest in skill sets that will pay. No use learning something just because you like it. Learn something for which companies are willing to pay top dollar.

b) Certifications - Get certified in things for which there will be a long-term demand. Not many developers do this. Build a diverse portfolio here. Just don't do all your certifications in Java for example.  Something like Scrum, Salesforce, and AWS is a good mix.

2) Look at your colleagues who are 10+ years older than you and ask yourself if you want to be doing the same stuff they are doing today. If the answer is no, find out what you need to do differently so as not to land in the same position as theirs ten years from now.


3) Read, Read, Read: Readers are Leaders / Leaders are Readers.

 4) Confidence:  This was something I lacked a few years ago, mainly because of my own technical shortcomings. After having followed steps 1 through 3 above, over the years I seem to have (unconsciously) developed a sense 'dont give a crap' about my job security.
Don't get me wrong. I try to have the humblest attitude at work. But i think when you lose the fear of losing and know that the world's your oyster, people will respect that.
I politely declined their initial offer at first. But they liked me so much they went out of their way to finally give me more than what i asked for. Lesson learnt - a humble attitude combined with  no sense of fear of losing can be a lethal (and a very rewarding) combination.

Source: Google.com

actor sivakumar health tips - நடிகர் சிவக்குமார் அட்வைஸ்.... | Tamil Motivational

நடிகர் சிவக்குமார் அட்வைஸ்....

நாலரை மணிக்கு விழிப்பு. ஒன்றரை மணி நேரம் வாக்கிங். வாக்கிங் இல்லாத நாட்களில், வீட்டிலேயே எட்டு வகையான யோகா. ராத்திரி ஒன்பது மணிக்குக் கட்டாயம் தூங்கப் போய்விடுவேன்.

பேரக் குழந்தைகள்தான் சுறுசுறுப்புக்குக் காரணம். காலை 7.20 பெசன்ட் நகர் சூர்யா வீட்டுக்குப் போய், பேத்தியை பிக்கப் பண்ணி, ஸ்கூல்ல கொண்டுவிடுவேன். திரும்பி வந்து 8.45க்குப் பேரனைக் கொண்டுபோய் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். தனிமை, மனஅழுத்தம்னு சொல்றவங்க, குழந்தைகளோட நேரம் செலவழிச்சா, சந்தோஷம் தானா வந்துடும்.

நிறைய சிறுதானியங்கள் சாப்பிடுறேன். காலையில் சிறுதானியக் கஞ்சி, ஆவியில் வேகவைச்ச ஏதாவது ஒரு டிஃபன். லஞ்சுக்கு மூன்று சப்பாத்தி, நிறையக் காய்கறி, வரகு அரிசி சாதம் ஒரு கரண்டி. சாயங்காலம் பப்பாளி, மாதுளை, பாதி ஆப்பிள். இரவுக்கு இரண்டு இட்லி, ஒரு தோசை, இடியாப்பம் தேங்காய்ப்பால்னு லைட்டா சாப்பிடுறேன். டீ, காபி குடிக்கிறது இல்லை. நிறையத் தண்ணீர் குடிக்கிறேன்.

மனசை லேசா வைச்சுக்க நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறேன். சொற்பொழிவுக்குத் தயார் பண்றது, எழுதறதுனு என்னை எப்பவும் பிஸியா வைச்சுக்கிறதால சோர்வு பக்கத்திலயே வர்றது இல்லை

நானே முழுப் பொறுப்பு

அடுத்தவர்கள் மீது பழிபோடுவதிலும் உடன்பாடு கிடையாது. எங்கே தவறு நடந்தாலும் அதன் விளைவுகளுக்கு நானே முழுப் பொறுப்பு. அதிர்ஷ்டம் என்ற போலியான வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது. நான் என்ன செய்கிறேனோ, அதன் பலனே எனக்குத் திரும்பக் கிடைக்கும்.

What is the difference between a lion and a deer?

The deer gets up in the morning, because he is feeling bored, and lazy. He is not hungry (maybe horny); clueless about what will happen with his fate. He wanders along.. confused.

Later in the day, he will run for sure; but not for fun, he will run to save his life.
The lion can gets up anytime, and if he gets up, its because he is hungry. Very hungry.. Boredom and laziness are the last things on this mind.. He needs food, and he will do everything & anything to get that.

He stretches, he roars, he gallops forward, with fire in his eyes, and hunger in his belly.. He is determined, focused, he is fast, and furious.


Later in the day, he will run for sure; not for fun, but he will run to hunt, to kill and to survive another day.


Source: Facebook.com