Showing posts with label tamil quotes. Show all posts
Showing posts with label tamil quotes. Show all posts

எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு

எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. சில பிரச்னைகள், பேசினதால வரும். சிலது பேசாம இருக்கறதால வரும். ஆனா எல்லாப் பிரச்னைகளும் அன்பாவும் உண்மையாவும் மனசிலேருந்தும் மானசீகமாவும் பேசினா, மொத்தமா காணாமப் போயிரும். எப்பவுமே இப்படி பேசிப் பழகிட்டா, பிரச்னை நம்ம கிட்டக்க வரவே வராது. வருமுன் காப்போம் திட்டத்துல, இதுவும் ஒண்ணு. வாழ்க வளர்க.

Source: RAM JI
எங்கேயும், எப்போதும் அவமானம் குறித்து பயமில்லையோ... அங்கே பேச்சும், செயலும் தெளிவாகவே இருக்கும்.

வைராக்கியம்

வைராக்கியம் என்பது கூரிய கத்தி.உறுதியான ஆயுதம். ஒரு போர்வீரன் அதை இடுப்பில் வைத்திருக்க வேண்டும்.போர்வீரனுக்கு தன் கத்தியின் மீதுள்ள மரியாதையும், பெண்ணுக்கு தன் கற்பின் மீதுள்ள மரியாதையும், வணிகனுக்கு தன் செல்வத்தின் மீதுள்ள மரியாதையும் போல நல்லோருக்கு வைராக்கியத்தின் மீது மரியாதை வரவேண்டும். இதை இழக்க முடியாது என்று இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.