Out of the night that covers me,
Black as the Pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds, and shall find, me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll.
I am the master of my fate:
I am the captain of my soul.

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள்...

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது.


  • புத்தகங்களை துணை கொள்.
  • உடலுழைப்பை அதிகரி.
  • சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
  • குளிர் நீரில் குளி.
  • கொஞ்சமாய் சாப்பிடு.
  • தியானம் கைகொள்.
  • இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
  • உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
  • உணவில் கீரை சேர்த்துக் கொள்.
  • எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
  • ஆத்திரம் அகற்று.
  • கேலிக்கு புன்னகை தா.
  • கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
  • நட்புக்கு நட்பு செய்.
  • வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
  • அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
  • அன்பு செய்தால் நன்றி சொல்.
  • இதமாகப் பேசு.

    நீ ஜெயிப்பாய். இது நிச்சயம். வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.
பிறர் எதிர்பார்க்கும் போது
நீ வென்றால் அது வெற்றி ஆகாது.
பிறர் ஏதிர்பார்க்காத போது
எதையும் எதிர்கொண்டு வென்றால்
அதுவே உன் திறமைக்கான வெற்றி.
எடுத்தவுடன் வெற்றி இங்கு யாருக்கும் கிடைத்தது இல்லை எடுப்பதெல்லாம்
தோல்வி என்று இங்கு யாருக்கும் அமைந்தது இல்லை
ஒரு செயலை எடுக்கப்படும் விதத்தில் இல்லை பிழை..
நீங்கள் முடிக்கப்படும் விதத்தில் மட்டுமே உள்ளது பிழை.

உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்
ஒரு உறுதியான முடிவோடு காலையில் கண் விழியுங்கள்…
இரவு உறங்கச் செல்லும் போது மன நிறைவுடன் செல்லுங்கள்
தடைகள் நம்மை
தடுப்பதற்காக அல்ல
நாம் தாண்டும்
உயரத்தை கூட்டுவதற்காக....

குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.
“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்…
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

#வாய்ப்புகளை_பயன்படுத்துகின்றவர்கள்வெற்றிகரமாக #வளம்வருகின்றனர்.






வெற்றியின் ரகசியம்!

''நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே
கண்டேன்.

வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், 'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது.
'90' முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!''

இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக் கூறியவர் யார் தெரியுமா?

பெர்னாட்ஷா!