Showing posts with label tamil-quotes. Show all posts
Showing posts with label tamil-quotes. Show all posts

வைராக்கியம்

வைராக்கியம் என்பது கூரிய கத்தி.உறுதியான ஆயுதம். ஒரு போர்வீரன் அதை இடுப்பில் வைத்திருக்க வேண்டும்.போர்வீரனுக்கு தன் கத்தியின் மீதுள்ள மரியாதையும், பெண்ணுக்கு தன் கற்பின் மீதுள்ள மரியாதையும், வணிகனுக்கு தன் செல்வத்தின் மீதுள்ள மரியாதையும் போல நல்லோருக்கு வைராக்கியத்தின் மீது மரியாதை வரவேண்டும். இதை இழக்க முடியாது என்று இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். 
உன்னுடைய குறைகளைப்பற்றி மட்டம்தட்டி மடக்க முற்பட்டால் குறுகிப்போய் விடாதே. தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் பலமான எதிர்விணை செய். 
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே...
கனவில் எதையும் ஓட்டாதேடா
ஜெயிக்கற இடத்த புடிடா...
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. –> லெனின்

வேதந் தெரிஞ்சிருந்தா வெம்பயனா ஓதுவேன்
ஓதும் தெரியவக ஓதியதத் தேடுவேன்
ஏதுந் தெரியலையே எப்படி நான் தேறுவேன்
போதும் பொலம்பும் பொழப்பும்... 

-> illayaraja.

தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே
வென்றவனுக்கு தான் " தோல்வி"- பயம் . 

தோற்றவனுக்கல்ல ..!!

மனைவி!!!

மனைவி ஒரு பொறுப்பு. அவளைப் பேணுதல் ஒரு கடமை. அவள் உனது குழந்தைகளின் தாய். உனக்கு ஸ்நேகிதி. நோய்ப்பட்டபோது தாதி. சுகத்துக்கு மட்டுமான பெண்ணில்லை. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொள்ளும் உறவு. தாய்-தகப்பனை விட்டு புருஷன் வீட்டிற்கு வந்த மனைவியைக் கொஞ்சி, சீராட்டி, ‘நானிருக்கிறேன். எந்த பயமின்றி எதுவும் கேள். மனம்விட்டுப் பேசு’ என்று ஆதரவு செய்ய, அவள் வாரி வழங்குவாள்.

தந்தை!!!

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.
உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும். -குரு.
துணிச்சலாக நேர்வழியில் வாழ்ந்தால்..பிரச்சனைகளும்..கவலைகளும் மட்டுமல்ல....எதிரிகளும்.....அமைதியாக போய் விடுவார்கள்.
செல்லும் இடத்திற்கேற்ப 
செதுக்கி கொள்ளும் நீர் போல் ஆக ஆசை !!
அம்மா என்பவள் மகள் வடிவம்; மகள் என்பவள் அம்மாவின் ரூபம் என்று உணர்ந்திருக்கிறேன். 


I love u amma!
பாதை இல்லையென்று கலங்காதே, உருவாக்கு!
"ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்."
"ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்"


"பணக்காரனாக வேண்டுமானால்
உழைப்பாளியாய் இரு!
புகழ் பெற வேண்டுமானால்
உண்மையாய் இரு!
வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால்
தன்னடக்கத்தோடு இரு!"

"நம்பிக்கைக்கு உரியவர்களே,
உத்தம உறவினர்கள்"



- [புத்தர்]
தீயவர்களோடு நேசம் செய்யாதே.
அற்பர்களோடு இணங்காதே.
நேர்மையான நல்லோருடன் நட்புக் கொள்.
மேன்மக்களோடு சேர்ந்து பழகு.
அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை
அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல்படுபவனையே
கைகூப்பித் தொழுகிறது.

- கன்பூசியஸ்
அடங்க மறு!

அத்து மீறு!!

- பகத்சிங்
நம்முடைய பலவீனங்களை வலுவாக மாற்றிக் கொள்ள வகை செய்வது நீண்ட காலம் நடைப்பெறும் போர்தான். ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய வெற்றிகள் ஒன்றாகச் சேரும்போது ஒரு மகத்தான வெற்றி கிடைக்கிறது!

- 'வோ குவன் கியா
'நாளைக்கு நல்ல காரியம் செய்வேன்' என்று சொல்பவன் முட்டாள்; அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான்! – மார்ஷல்